» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
சனி 4, அக்டோபர் 2025 5:04:00 PM (IST)
தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
