» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேரன்மகாதேவி வட்டத்தில் பலத்த காற்றில் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: ஆட்சியர் ஆய்வு

சனி 4, அக்டோபர் 2025 4:50:47 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் மழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நேரில் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு வீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2 கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய இடங்களில் கனமழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று (04.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம் 03.10.2025 அன்று மாலை சுமார் 6.00 - மணியளவில் பெய்த கனமழை மற்றும் சுழல் காற்று கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு வீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2 கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

எனவே, தோட்டக்கலை துறையினர் மழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொண்டு, சேதம் குறித்த அறிக்கையினை விரைந்து தயாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தோட்டக்கலைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில், சேரன்மகாதேவி வட்டாட்சியர் காஜா கரிபுன் நவாஸ் , தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory