» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக நிர்வாகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சனி 4, அக்டோபர் 2025 3:33:52 PM (IST)



கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டிற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ரோடி, இவர் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. இவரது மனைவி செளமியா, பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தினேஷ் ரோடி இ.மெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார். அவரது வீட்டு பகுதியில் மூன்று ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது 

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல்,  அகற்றல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தினேஷ் ரோடி வீடு, அருகில் உள்ள கார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory