» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்: அக்.8 கடைசி நாள்!!

வெள்ளி 3, அக்டோபர் 2025 4:02:55 PM (IST)

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2026 -ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய தூத்துக்குடி (Nodal Govt. ITI) துணை இயக்குநர்/ முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

தனித்தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory