» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 3:49:40 PM (IST)

திருநெல்வேலியில் முதலமைச்சர் கோப்பைக்காக மாநில அளவில் மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியினை சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (03.10.2025) முதலமைச்சர் கோப்பை மாநில அளவில் மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின்பு, விளையாட்டுத்துறையில் மாணவ, மாணவியர்கள் மட்டுமல்ல அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்குபெற வேண்டுமென்பதற்காக மாவட்ட அளவில், மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான 27 வகையான போட்டிகள், 57 வகைகளில் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் தனித்தனியாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 11 மாவட்டங்களில் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவிகளுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில், இன்றையதினம் இப்போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் முதல் 07.10.2025 வரை பள்ளி மாணவியர்களுக்கும், 08.10.2025 முதல் 12.10.2025 வரை கல்லூரி மாணவியர்களுக்கும் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
38 மாவட்டங்களிலிருந்து 1500 மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். கலந்து கொள்ளும் அனைத்து மாணவியர்களுக்கும் தேவையான சீருடைகள், தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி போன்ற அனைத்து விதமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில், முதல் பரிசு தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு தலா ரூ.25 ஆயிரமும் என முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெறும் அணியிலுள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும் மொத்தம் ரூ.54 இலட்சம் பரிசுத்தொகையுடன், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.37 கோடிகள் பரிசுத் தொகையான அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் வழங்கப்படுகிறது.
போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் அரசு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை போன்ற சீருடைப் பணியாளர்கள் பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, துணை வட்டாட்சியர் (ஒருங்கிணைப்பாளர்) முருகேஷ், முக்கிய பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, ஜோசப் பெல்சி, பரமசிவ ஐயப்பன், சித்திக், பயிற்றுனர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
