» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் பயணிகள் சங்கம் கோரிக்கை!

வெள்ளி 3, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)



கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு,ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.

மதுரை ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் 22 ஆம் இடத்தில்  கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Monnamohamed M rtd. Prison dept. Officio Kallidai kurichiOct 5, 2025 - 04:31:56 PM | Posted IP 162.1*****

SIR I REQUESTED TO PLEASE DO NECESSARY ACTION TO UPGRADE OUR KALLIDAIKURICHI RAILWAY STATION. THANK YOU SO MUCH

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory