» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
நெல்லையில் ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி குறுந்தகவல் வந்ததால் அங்கன்வாடி பணியாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சேபா (43) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் சேபா தனது மூன்று குழந்தைகளோடு தந்தை ஆசிர்வாதத்தின் அரவணைப்பில் மருதகுளத்தில் வசித்து வருகிறார் மேலும் சேபா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான மின் கட்டணத்தை அளவீடு செய்ய நேற்று மின் ஊழியர்கள் வந்துள்ளார்.
கட்டணம் அளவீடு எடுத்து விட்டுச் சென்ற நிமிடங்களில் சேபாவின் செல்போனிற்கு வந்த குறுந்தகவலில் மின் கட்டணம் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என வந்ததைக் கண்டு சேபா கடும் அதிர்ச்சி அடைந்தார் வழக்கமாக அதிகபட்சம் 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வரும் நிலையில் திடீரென கோடிக்கணக்கில் மின் கட்டணம் வந்ததைக் கண்டு மிரண்டு போன சேபா மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டார்.
அதன் பெயரில் இன்று மின் ஊழியர்கள் சேபா வீட்டுக்கு சென்று மின்மீட்டரை பரிசோதனை செய்தபோது அளவீடு செய்ததில் குளறுபடி நடந்தது தெரியவந்தது இதையடுத்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி குளறுபடியை சரி செய்தனர் அதன்படி சேபாவுக்கு வெறும் 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்தது.
இந்த குளறுபடி குறித்து நாங்குநேரி உதவி செயற்பொறியாளர் ஆஷாவிடம் கேட்டபோது, மின் கட்டணம் அளவீடு செய்த போது நடந்த தவறால் இந்த பிரச்சனை வந்துள்ளது. அதாவது சேபா வீட்டில் எங்கள் ஊழியர் ரீடிங் எடுக்கும்போது சரியான மின் அளவு 14109 KWH என காட்டி உள்ளது ஆனால் அவர் அதை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக 1410907 KWH என பதிவேற்றம் செய்துவிட்டார்.
ஒரு டிஜிட் எண் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூலைக்கரைப்பட்டி உதவி பொறியாளர் மூலம் செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பிரேக்கிங் தரிசன முறை: வாபஸ் பெற இந்து முன்னணி வலியுறுத்தல்!
சனி 6, செப்டம்பர் 2025 5:26:52 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து எதிரொலி - தேர்தல் அலுவலகம் மூடல்!
சனி 6, செப்டம்பர் 2025 4:19:06 PM (IST)

பண மதிப்பிழப்பின்போது ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கிய சசிகலா: சிபிஐ வழக்கு!
சனி 6, செப்டம்பர் 2025 4:05:09 PM (IST)

அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை : செங்கோட்டையன் கருத்து!
சனி 6, செப்டம்பர் 2025 12:43:54 PM (IST)

செங்கோட்டையன் 10 நாள் கெடு: அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் அவசர ஆலோசனை!
சனி 6, செப்டம்பர் 2025 11:57:34 AM (IST)
