» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கேரி பைகளை பயன்படுத்தக்கூடாது வியாபாரிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர்லால் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுவாரியம் சார்பில் நெகழி கழிவு சேகரிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் வியாபார வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "மக்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட் சாலைகள் எல்லாம் அமைத்துள்ளோம். மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட 28 வகையான உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்உறை, மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக்தாள், தெர்மாகோல் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள்,
பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள் எந்த தடிமனாக இருப்பினும், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் காலான உறிஞ்சிக்குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிஸாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட ஐஸ்கீரிம், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டிரின் தெர்மாகோல், பிளாஸ்டிக் முட்கரண்டிகள்,
பிளாஸ்டிக் கரண்டிகள், பிளாஸ்டிக் கத்திகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இணிப்பு பெட்டிகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் அழைப்பிதழ் அட்டைகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்கிரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் பிளாஸ்டிக் கிளரிகள், பிளாஸ்டிக் தட்டுகள், ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள பொருட்களாகும். அதை யாரும் பயன்படுத்தக்கூடாது ஏற்கனவே பிளாஸ்டிக் நெகிழிகளை தமிழக அரசு தடைசெய்யப்பட்டு 3 ஆண்டுகளாகிறது.
நீர்வழித்தடங்களில் அதிக அளவில் இந்த கழிவுகள் சேர்வதால் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு எங்களுக்கு சவாலாக உள்ளது. 11 நீர்வழித்தடங்கள் பக்கிள்ஓடை பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் கேரிப்பை கப், வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத இடத்தில் நாம் வாழ்ந்து வந்தோம் அதை நாம் மாற்றி சுகாதாரமான முறையில் மக்கள் வாழும் வகையில்வழிவகுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி பேரூராட்சி திருப்பரக்குன்றம் பழனி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எங்கும் அது விற்பனை கிடையாது நாங்கள் தொந்தரவு செய்ய வில்லை. மார்க்கெட் வியாபாரிகள் சிறிய வியாபாரிகள் கடை வியாபாரிகள் கேரிப்பையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் விற்பனையும் செய்யக்கூடாது. அதற்காகதான் இந்த கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 2023 வெள்ளகாலத்திற்கு பின்பு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் குறைந்த பாடு இல்லை. ஹோட்டல்களில் இலை தான் பயன்படுத்த வேண்டும். இந்த ஊரில் 10 லட்சம் பேர் இருந்தால் 10 லட்சம் போலீசார் கிடையாது 1000 பேருக்கு குறைவாக தான் இருப்பார்கள் அது போல தான் நாம் எதிர்கால தலைமுறையினரும் பாதித்துவிடக்கூடாது இந்த நிலையை மாற்றுவதற்கு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சங்க நிர்வாகிகளும் வியாபார பிரமுகர்களும் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் உங்கள் ஓத்துழைப்பால் தான் இதை முழுமையாக நாம் அப்புறப்படுத்த முடியும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், நெடுமாறன், ராஜபாண்டி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் தெர்மல்ராஜா, செயலாளர் ஜவஹர், பொருளாளர் விக்னேஷ், வஉசி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, மற்றும் ஜெபராஜ், வியாபார பிரமுகர்கள் மாநகராட்சி சுகாதாரதுறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)

கூவத்தூரில் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:14:18 PM (IST)

வாழ்த்துகள்Aug 22, 2025 - 10:22:42 PM | Posted IP 162.1*****