» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தியேட்டர் இருக்கைகளில் க்ரீஸ் தடவி இருந்தால்.. விஜய் மீது திமுக மாணவர் அணி விமர்சனம்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:56:06 AM (IST)

தியேட்டர் இருக்கைகளில் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் நடிகர் விஜயின் கோர முகம் அப்போதே புரிந்திருக்கும் என்று திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சேலத்தில் 5 லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்கு பந்தல் போட்டு அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் பேசினாலும், அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உணவும் கொடுத்து புகைப்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும் வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் எங்கள் உதயநிதி ஸ்டாலின்.

வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி, சாமானிய தொண்டனைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய். தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள், தியேட்டர் இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் இந்த ரசிகர்கள் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும் சுயநலம் நடிகர் விஜய். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory