» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி : ஊழியர் கைது

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:40:51 PM (IST)

நெல்லை டவுனில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையை சேர்ந்தவர் செல்வ ஜெபஸ்தியான்(43). இவர் நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதே கிளையில் குழு தலைவராக சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அருண்குமார் தினமும் தனக்கு கீழ் பணிபுரியும் களப் பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்து ஒப்படைக்கும் பணத்தை வாங்கி அதனை நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில செலுத்தி அதற்கான ரசீதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரையிலும் வசூல் செய்த பணத்தை அருண்குமார் தனது நிறுவனத்தின் வங்கி கிளையில் செலுத்தாமலேயே போலியாக ரசீது ஏற்பாடு செய்து பணத்தை செலுத்தி விட்டதாக மோசடி செய்துவிட்டதாக கிளை மேலாளரான செல்வ ஜெபஸ்தியான் தனது ஆய்வில் கண்டுபிடித்தார்.

மேலும் இவ்வாறாக கடந்த 4 மாதங்களில் நிறுவனத்தின் பணம் ரூ.13 லட்சம் வரை அவர் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்வ ஜெபஸ்தியான் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory