» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:37:51 PM (IST)

நெல்லை அருகே காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த 3 சி.சி.டி.வி.  காமிராக்களை திருடி விற்க முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாப்பாக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது காசி தர்மம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்கள் சேதமடைந்திருந்தன. மேலும் அங்கிருந்த ஒரு காமிரா காணாமல் போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் 3 பேர் குடிபோதையில் காமிராக்களை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சி.சி.டி.வி. காமிராக்களை சேதப்படுத்தியது காசி தர்மம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை (19), இசக்கி செல்வம் (20) சுடலைக்கனி(26) என தெரிய வந்தது. மேலும் அவர்கள் சி.சி.டி.வி. காமிராக்களை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாப்பாக்குடி போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory