» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:29:37 PM (IST)

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06030) செப்டம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 13 முறை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதேபோல், மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு திங்கட்கிழமைதோறும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (06029) செப்டம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலும் கூடுதலாக 13 முறை இயக்கப்படுகிறது.

மேலும், திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் (06190/ 06191) செப்டம்பர் 2-ம் தேதி வரை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory