» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர் தகவல்

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:22:29 PM (IST)

தேசிய பெண் குழந்தை விருது பெற, தகுதி வாய்ந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகள் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும் பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. 

இவ்விருதுடன் காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெற (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விதிமுறைகள்.

1. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்டபடி (31 டிசம்பர்) தமிழகத்தில் வசிக்கும் பெண்குழந்தை

2. கீழ்க்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

பெண் கல்வி

பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு

பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல்

வேறு ஏதாவது வகையில் சிறப்பான /தனித்துவமான சாதனை செய்திருத்தல்

பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

மேலும், தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருநெல்வேலி-09 என்ற அலுவலக முகவரியினை அணுகி தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory