» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் முன் பாய்ந்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 7:54:04 AM (IST)

விருதுநகர் அருகே தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கைப்பற்றி, மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் பட்டம்புதூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தர்மரின் மனைவி ராஜவள்ளி (60), அவரது மகள்கள் மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) என்பது தெரியவந்தது.

அண்மைக்காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த ராஜவள்ளி, குடும்ப வறுமையைக் கண்டு வருந்தி வந்ததாகவும், வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான தனது இரு மகள்களுக்கும் தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியிலும், இரு மகள்களுடன் ராஜவள்ளி நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரம் - திருச்சி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory