» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி : பதவிநீக்க மசோதாவுக்கு முதல்வர் கடும் எதிர்ப்பு!

புதன் 20, ஆகஸ்ட் 2025 5:48:35 PM (IST)

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இந்த மசோதா குறித்து கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் ஆணி வேரையே தாக்கி, இந்தியாவை சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க மசோதா முயற்சிக்கிறது. நாட்டை சர்வாதிகாரத்தின் பிடியில் தள்ளும் நோக்கத்தில் மத்திய அரசு ஜனநாயகத்தின் அடித்தளங்களை தகர்க்கிறது. 

வாக்கு திருட்டு அம்பலமாகியுள்ள நிலையில் பாஜக அரசு அமர்ந்து இருப்பதே கேள்விக்குறியாகிவிட்டது. மத்தியிலமைந்துள்ள பாஜக அரசு சட்டபூர்வமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அம்பலமான வாக்கு திருட்டு மோசடிகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது. அரசியலமைப்புக்கு விரோதமான இந்த மசோதாவை நீதிமன்றங்கள் நிச்சயமாக நிராகரிக்கும். 

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல், விசாரணை இல்லை, தண்டனை இல்லை என்பது பாஜகவின் உத்தரவு. இது சீர்திருத்தம் இல்லை. கருப்பு மசோதா. கருப்பு நாள். ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வாக்குகளை திருடுதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

நேர்மையான சர்வாதிகாரம்Aug 22, 2025 - 04:22:27 PM | Posted IP 172.7*****

பிஜேபி அரசின் மற்றுமொரு சாதனை. நேர்மையான அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை இல்லை. ஊழல் அரசியல் வாதிகள்தான் இந்த சட்டத்தை எதிர்ப்பார்கள்.

முட்டாள்Aug 20, 2025 - 06:53:35 PM | Posted IP 172.7*****

10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து பேச்சை பாருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory