» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு!
புதன் 20, ஆகஸ்ட் 2025 5:21:09 PM (IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சன் நெட்வொர்க் சாா்பில் எம்.ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சா்ஸ் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படத்தை விட கேஜிஎஃப் உள்ளிட்ட பிற திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன், மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன் விசாரணக்கு வந்தது.
அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிறோம் என்று தெரிவித்த போது, அதனை ஏற்றுக் கொண்டு, தற்போது வழக்கு தொடுத்துள்ளதாகவும், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படிதணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 25-க்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
