» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க., மாநாட்டில் விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் சரிந்து விபத்து : கார் சேதம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:49:00 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது "வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு நாளை (ஆக.21) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் 10 முதல் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாட்டைப் போலவே 2 வது மாநாட்டுக்காகவும், முகப்பில் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது அதை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக 30 டன் எடையைத் தாங்கும் ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை நிறுவ நிர்வாகிகள் முயன்றனர். அப்போது கிரேனில் பெல்ட் அறுந்து கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது. கம்பம் இரண்டாக உடைந்து நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்து, அந்த கார் கடுமையாக சேதமானது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
😳😳😳 pic.twitter.com/li7RRreiGt
— Karthik Ravivarma (@Karthikravivarm) August 20, 2025
சேதமடைந்த கார் மற்றும் கொடிக் கம்பத்தை அகற்றும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். நாளை மாநாடு நடைபெறும் நிலையில், இன்று கொடிக் கம்பம் விழுந்து சேதமான சம்பவம் தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
