» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் வந்தேபாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் : மத்திய அமைச்சரிடம் துரை வைகோ மனு!

புதன் 20, ஆகஸ்ட் 2025 8:39:24 AM (IST)



கோவில்பட்டியில் நெல்லை வந்தேபாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் மத்திய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

துரை வைகோ எம்.பி. புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அதில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் (ரயில் எண். 20665/20666) விரைவு ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க வணிக, தொழில்துறை மற்றும் கல்வி மையமாக கோவில்பட்டி உள்ளது. கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தார், சாத்தூர் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் மையமாக கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு வந்தே பாரத் ரயில் நின்று சென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், அவர்களது பயண நேரமும் குறையும்.

ஏற்கெனவே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி மக்களின் சார்பில் இந்த கோரிக்கையை தங்களிடம் வைத்துள்ளார். எனவே, சென்னை - நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல உடனடி நடவடிக்ைக எடுக்க வேண்டும், என ெதரிவித்துள்ளார். இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அமைச்சரும் உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து

JAY FANSAug 20, 2025 - 02:54:45 PM | Posted IP 162.1*****

ஏற்கனவே கடம்பூர் ராஜு (அதிமுக) அவர்கள் கோரிக்கை வைத்து அதை நடைமுறை படுத்திவிட்டார்கள், இப்போது இவர் ஏன் மக்களை ஏமாற்றி உருட்டுகிறார் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory