» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்: 2பேர் கைது - 3 பெண்கள் மீட்பு!!

புதன் 20, ஆகஸ்ட் 2025 7:55:47 AM (IST)



கோவில்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டையபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற மசாஜ் சென்டர் செயல் பட்டு வருகிறது. இதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். 

சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடந்தது உறுதியானது. இதையெடுத்து  அங்கிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (59), மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  மேலும் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை மீட்டு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory