» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நூதன முறையில் ரூ.10 கோடி மோசடி: எஸ்.பி.யிடம் மதபோதகர், சபை மக்கள் புகார்!!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 7:58:04 PM (IST)



செய்துங்கநல்லூர் அருகே அறக்கட்டளை பெயரில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள மேல நாட்டார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் டோனேல். இவர் கிறிஸ்தவ மத போதகராக ஊழியம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த விஜய பானு என்பவர் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் தான் அறக்கட்டளை நடத்தி பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

இதில் ஏழை மக்கள் 5000 முதல் 50000 முதல் பணம் செலுத்தினால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை பணம் 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை வழங்குவதாகவும் மீண்டும் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி வழங்குவதாகவும் கூறியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் எனவே இதற்கு தங்கள் அறக்கட்டளைக்கு ஆட்களை சேர்த்து விட வேண்டும் என அவரிடம் கூறியுள்ளார்

இதை நம்பிய மத போதகர் டேனியல் டோனேல் தனது சபைக்கு வருபவர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த திட்டங்களில் பணங்களை முதலீடு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 2023 முதல் ஜனவரி 2025 ஆம் தேதி வரை இந்த திட்டங்களில் சேர்ந்தவர்கள் பணத்தை கட்டி உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சேலம் அம்மாபேட்டை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் மோசடி பேர்வலியான விஜய பானு மற்றும் அவரது கூட்டாளி ஜெயப்பிரதா செய்யது மைக்கேல் ஸ்ரீராம் ஆகியோர் மீது புகார் வந்ததை தொடர்ந்து விஜய் பானு ஜெயப்பிரதா மைக்கேல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் இந்த மோசடி கும்பல் வெளிவந்துள்ளது. 

இந்த செய்தி தெரிந்தவுடன் தாங்கள் மோசடியாக ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து மத போதகர் டேனியல் டோனேல் விஜயபானு மற்றும் அவரது கூட்டாளிகள் ஜெயப்பிரதா ஆகியோரை அணுகி சாதாரண ஏழை எளிய மக்கள் பணத்தை உடனடியாக திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு விஜய பானு மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை திருப்பி தராமல் பணத்தை திருப்பி தர முடியாது நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் எனக் கூறியதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார் 

இதைத் தொடர்ந்து சுமார் 10 கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பலை சேர்ந்த விஜயபானு, ஜெயப்பிரதா, சையது மைக்கேல் ஸ்ரீராம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மதபோதகர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory