» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:19:47 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் புதிய சாதனைப் படைத்துள்ளது.
இதுகுறித்து துறைமுக ஆணையம வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த ஜீலை மாதத்தில் 343 காற்றாலை இறகுகளை கையாண்டு, கடந்த ஆண்டின் ஜீலை மாதத்தில் கையாண்ட அளவான 180 காற்றாலை இறகுகளை விட 90.56% அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும், இதே மாதத்தில் 8 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாக கப்பல்களை கையாண்டு கடந்த ஜீலை மாதம் கையாண்ட 4 கப்பல்களைவிட அதிகமாக கையாண்டு 100% அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்த காற்றாலை இறகுகள் பெரும்பாலும் வ.உ.சி சரக்குதளம் 5, 6 மற்றும் 3 ஆகிய கப்பல் தளங்களில் கையாளப்படுகின்றன. இத்தகைய பெரிய சரக்குகளை பாதுகாப்பாகவும், திறமையாகவும் கையாளுவதற்கு வசதியாக துறைமுகம், இரண்டு பெரிய வகை கையாளும் இயந்திரங்களையும் (crawler cranes), மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களையும் (Harbour mobile cranes ) பயன்படுத்துகிறது.
அதிகரித்து வரும் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் ஏற்றுமதியினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்திற்குள் சுமார் 1,00,000 சதுர மீட்டர் நிலப்பரப்பினை துறைமுகம் ஒதுக்கியுள்ளது.
மேலும், இந்த காற்றாலை இறகுகளின் இயக்கத்திற்காக பிரத்தியோகமான நுழைவாயிலையும் துறைமுகம் அமைத்துள்ளது. துறைமுகத்தின் இந்த உள்கட்டமைப்பு இத்தகைய மிகப்பெரிய உபகரணங்களை பாதுகாப்பான முறையில் தடையில்லாமல் கையாளுவதற்கு உதவியாக அமைந்துள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உதவியாக உள்ளது.
நெரிசல் இல்லாத சாலை போக்குவரத்தின் மூலம், காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விரைவாக துறைமுகத்தை வந்தடைவதற்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலைகள் துறைமுகத்தினை இணைக்கின்றன.
மேலும் துறைமுகத்தின் திறமையான பணியாளர்களினால் இத்தகைய சரக்குகளைப் பாதுகாப்பாகவும் சீராகவும் கையாள முடிகிறது. இந்த காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் கூறுகையில் காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்வதில் இந்திய துறைமுகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை ஒரு விருப்பமான துறைமுகமாக நிலைப்படுத்துவதற்கு இச்சாதனை பெரிதும் உறுதுணையாக அமையும் என்று கூறினார். மேலும் அவர் காற்றாலை இறகுகளைக் கையாளுவதற்கு வசதியாக துறைமுகம் ஒரு பிரத்தியோகமான முனையத்தை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
