» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலக புகைப்பட தினவிழா : நெல்லையில் புகைப்பட கலைஞர்கள் இரத்த தானம்!!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:49:14 PM (IST)



உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது. 

உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த தினத்தை ஓ. பி. ஷர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1988 இல் முன்வைத்து, 1991 முதல் அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார். 

இன்று 86ஆவது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக சங்கர் காலனி  ஷாலோம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை அரசு பொது மருத்துவமனையில்  புகைப்பட கலைஞர்கள் குருதி வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory