» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)
மதுரையில் நடைபெறும் த.வெ.க., மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் வழித்தடங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை - தூத்துக்குடி சாலையில் பாரபத்தியில் என்ற இடத்தில் தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு ஆக.21-ல் நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அன்றைக்கு போக்குவரத்தில் வழித்தட மாற்றங்களை செய்து மதுரை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
பார்க்கிங் 1-
அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநட்டுக்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாகவும், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாகவும் மாநாட்டு திடலை அடைய வேண்டும்.
இதுபோல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், அ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். இந்த வாகனங்கள், பார்க்கிங் 1-ஐ வந்தடைய வேண்டும்.
பார்க்கிங்- 2 மற்றும் பார்க்கிங் -3
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாகவும், தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்காணூரணி,நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர், கூடக்கோவில் வழியாகவும் வர வேண்டும்.
இந்த வாகனங்கள் பார்க்கிங் -1ஏ என்ற இடத்தில் நிறுத்த வேண்டும். சென்னை மாநகரம், விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை இருந்து திருச்சி மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரபத்தி வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். இந்த வாகனங்கள், பார்க்கிங்- 2 மற்றும் பார்க்கிங் -3 ஐ வந்தடைய வேண்டும்.
சென்னை மாநகரம், வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக செல்ல வேண்டும். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரியில் இருந்து மதுரை மார்க்கமாக வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.
சென்னை மாநகரம், வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் காரைக்குடி கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.
விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும். மேற்கு மாவட்டங்களிலிருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.
மேற்கு மாவட்டங்களிலிருந்து மதுரை மார்க்கமாக ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்ல வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் பேரையூர், உசிலம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேனி செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், பெரியகுளம், வழியாக செல்ல வேண்டும்.
பொதுமக்களுக்கான வாகன வழித்தடம்;
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக வரும் பொதுமக்களின் வாகனங்கள், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சென்று திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். அல்லது பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி செல்லும் வாகனங்கள் கப்பலூர் மேம்பாலம், திருமங்கலம், கள்ளிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
மாநாட்டுக்கு வரும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். மாநாடு நடைபெறும் அன்று போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அருப்புக்கோட்டை சந்திப்பில் இருந்து பாரப்பத்தி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை பயன்டுத்துவதை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
