» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரியில் நிறுத்தம் : நெல்லை எம்பிக்கு பயணிகள் நலச்சங்கம் நன்றி

ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 9:54:22 AM (IST)



புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் பெற்று தந்த ராபர்ட் ப்ரூஸ் எம்பிக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். 

கொரோனா காலத்துக்குப் பிறகு நாங்குநேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லாமல் இருந்த மதுரை புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் பெற்று தந்த திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸுக்கு நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை தாலுகா ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். 

நல சங்க தலைவர் வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து, நாங்குநேரி வளர்ச்சி கமிட்டி ஆலோசகர் செ. துரைச்சாமி, நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்ணு, நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், மதிமுக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory