» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி எம்பி பேட்டி
சனி 16, ஆகஸ்ட் 2025 9:07:26 PM (IST)

அமலாக்கத்துறை உள்ளிட்ட எத்தகைய சோதனையையும் திமுக எதிர்கொள்ளும் என்று கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை, கனிமொழி எம்பி திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தாராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, "பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள் மீது தொடர்ந்து இன்கம் டேக்ஸ், இடி, சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
தற்போது நடைபெற்று வரும் ரைடை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்கொள்ளும், நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களை கடந்து கழகத்தோடு உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலும் கழக தோழர்களை தலைவர்களை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
