» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா: பொது மக்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 5:17:52 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெறும் ஆறாவது புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைத்து பொது மக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி புத்தகத் திருவிழாவில் 100 புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. புத்தக திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது. மேற்காண் புகைப்பட போட்டியில் தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ள தருவை மைதானத்தில் பொது மக்களின் கண்காட்சிக்கு வைக்கப்படும். புகைப்பட கண்காட்சிக்கென தருவை மைதானத்தில் தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கான விவாத அரங்கமாக தருவை மைதானத்தில் முத்து அரங்கம் தனியாக அமைக்கப்பட உள்ளது. மேலும், 22.08.2025 முதல் 31.08.2025 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும், அனைத்து கல்லூரி பேராசியர்களுக்கும், அனைத்து பள்ளி ஆசியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், தலைச்சிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், மிகச்சிறந்த சமூக சிந்தனைப் பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். புத்தகத் திருவிழாவில் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
