» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.15) மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.

இவரது அண்ணன்கள் மூவர் ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்கள். எனவே, ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார் கணேசன். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்எஸ்எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

முதலில் நாகர்கோவில் நகரப் பொறுப்பாளர். அடுத்து, நெல்லை, மதுரை மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ‘எம்ஆர்டிகே’ எனப்படும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர். அடுத்து, குமரி முதல் திருச்சி வரையிலான அத்தனை மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர். அடுத்து மாநில இணை அமைப்பாளர். 

ஆர்எஸ்எஸ்ஸில் இப்படிப் பயணித்த கணேசனை பாஜக பணி நோக்கித் திருப்பியவர் ஹெச்.வி.சேஷாத்ரி. 1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை அழகுபார்த்தது பாஜக. மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் ஏனைய உறுப்பினர்களோடு நட்போடு உறவாடும் கணேசனைப் பலர் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எம்.பி. பதவியைத் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநராக இருந்தார். பின்னர் நாகலாந்து ஆளுநராக்கப்பட்டார். இல.கணேசன் நல்ல வாசிப்பாளரும் கூட, பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.

தமிழ் ஆர்வலர், அரசியலில் நிதானமானவர், யோகாவில் ஈடுபாடு உடையவர், வாசிப்பாளர், இலக்கிய ஆர்வம் மிக்கவர், தான் பற்றிக் கொண்ட ஆர்எஸ்எஸ் கொள்கைக்கான சிறந்த செயற்பாட்டாளர் என்ற பல்வேறு பண்புகளோடு இருந்த அவரின் மறைவு பாஜகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Aug 16, 2025 - 11:25:26 AM | Posted IP 172.7*****

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இல.கணேசனுக்குப் பிறகு டாக்டர் கிருபாநிதி நியமிக்கப்பட்டார். கிருபாநிதி நியமிக்கப்பட்ட பிறகும் ஒரு வருட காலமாக வங்கிக்கணக்கு கிருபாநிதியின் பெயருக்கு மாற்றப்படவில்லை... டாக்டர் கிருபாநிதி எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தும் இல.கணேசன் வங்கிகணக்கை கிருபாநிதியின் பெயருக்கு மாற்றிக் கொடுக்கவில்லை.... ஒருமுறை டாக்டர் கிருபாநிதியும் இல.கணேசனும் சென்னை விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்... அப்போது கிருபாநிதி இல.கணேசனிடம் அந்த வங்கிக்கணக்கை எப்போது மாற்றித் தருவீர்கள்? என யதார்த்தமாக கணேசனிடம் கேட்டார்.... ப....ப் பயலே.... உன்ன தலைவரா வச்சிருக்கோம்.... அதோட நிறுத்திக்கணும்.... அக்கவுண்ட்டல்லாம் என் பேருலதான் இருக்கும்.... அதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தீன்னா செருப்பு பிஞ்சிறும்ன்னு சொல்லி அத்தனைபேர் முன்னிலையிலும் கிருபாநிதி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்... பலபேரிடம் கிருபாநிதி முறையிட்டுப் பார்த்தார்.... கணேசன் என்னும் பாப்பானை யாரும் கண்டிக்கவே இல்லை.... கட்சியும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.... கிருபாநிதி மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கே முழுக்கு போட்டு விட்டார்... நம்மை சாதி பெயரைச் சொல்லி திட்டி அடித்தே விட்டானே... இந்த கட்சிக்காக இத்தனைநாள் வீணாக உழைத்து நம் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டோமே என்ற வருத்தத்தில் அவர் செத்தே போய் விட்டார்.... தாழ்த்தப்பட்ட பெண்ணை நாங்க சனாதிபதி ஆக்கியிருக்கோம்.... எல்.முருகனை அமைச்சர் ஆக்கியிருக்கோம் என பீத்திக்கொள்ளும் கட்சியின் உண்மை முகம் இதுதான்... அந்த கட்சியில் பயணிக்கும் பாப்பானைத் தவிர மத்தவங்களுக்கு புரிஞ்சா சரி..... இல.கணேசன் பொம்பள பொறுக்கி மட்டும் அல்ல.... சாதி வெறியன் மட்டும் அல்ல... கொழுப்பெடுத்து திரிஞ்சவன்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory