» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:24:14 AM (IST)

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் இளம்பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழா இன்று நடைபெற்றது. விழாவில்; மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். மேலும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ. 5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலர், மகளிர் திட்டம், நில அளவை பதிவேடு துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பாக பணிபுரிந்த 515 அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 7 பள்ளிகளைச் சார்ந்த 705 மாணவர்கள் மற்றும் 55 ஆசிரியர்கள் என மொத்தம் 760 நபர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய 69 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். விழாவில், மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சைனிக் பள்ளி மாணவர்களின் பேக் பேண்ட் பைப் இசை நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (கோவில்பட்டி) ஹிமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), சுகுமாறன் (திருச்செந்தூர்), காவல் துறை உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
