» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது : நெல்லையில் பரபரப்பு
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:41:35 AM (IST)
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தவர் சசிகுமார் (45). 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை அருகே ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 9-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையாம். உடனே மாணவி, சக மாணவிகளின் உதவியுடன் ஒன் ஸ்டாப் சென்டர் குழந்தைகள் காப்பகம் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.
உடனடியாக குழந்தைகள் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். சசிகுமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் போக்சோ சட்டத்தில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
