» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ரஜினியின் கூலி திரைப்படம் ரிலீஸ் : ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:43:04 PM (IST)

ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தூத்துக்குடியில் கூலி திரைப்படம் பாலகிருஷ்ணா, பெரிசன் பிளாசா, கிளியோபட்ரா ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியானது. இதன் காரணமாக காலை முதலே திரையரங்குகளில் முன்பு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது ரசிகர்கள் திரையரங்கு முன்பு உற்சாக நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல் படமான அபூர்வ ராகங்கள் துவங்கி, கூலி திரைப்படம் வரை அவரின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் அனைத்து படங்களையும் வெளியிட்ட பெருமை சேர்க்கும் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கத்தில் இன்று கூலி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு வருகை தந்தனர் மேலும் ரஜினி மாஸ் அணிந்து ரசிகர்கள் வந்தனர்.
மேலும் பாலகிருஷ்ணா திரையரங்கம் சார்பில் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் வகையில் யாதும் அறியான் திரைப்பட கதாநாயகன் தினமலர் தினேஷ், திரையரங்கு உரிமையாளர்கள் தனபாலகிருஷ்ணன், ராமையா, ராஜ் திரையரங்க மேலாளர் பாஸ்கரன், மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர் அப்போது ரசிகர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வழங்கினர். கூலி படத்தை காண அதிக அளவில் ரசிகர்கள் திரண்டு வந்ததால், தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
