» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி : திரளானவர்கள் பங்கேற்பு

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:40:47 AM (IST)



வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா நற்கருணை பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8-ம் திருநாளான நேற்று இரவு நற்கருணை பவனி நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மார்ட்டின், ஜான் பிரிட்டோ, இருதயராஜ், தேவராஜன், லியோன், ராஜன், ததேயூஸ்ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட நற்கருணை பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் சூட்டும் நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். அதிகாலை 1 மணிக்கு அன்னையின் அதிசய தேர் பவனி நடைபெறுகிறது.

10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலி, ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. பின்னர் அன்னையின் அதிசய தேர் பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்டியன், உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் நிதிக்குழுவினர், இறைமக்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory