» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் லெவிஞ்சிபுரம் பகுதிகளுக்கு கண்ணன்குளம் அன்னை திருமண மண்டபத்தில் இன்று (17.07.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பொதுமக்களிடையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் சேவைகள் கிடைப்பதற்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 255 முகாம்கள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பட்டு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 07.10.2025 வரை இம்முகாம்கள் நடைபெறவுள்ளது.
இன்றையதினம், அம்பாசமுத்திரம் வார்டு எண்.1, 2 அம்பாசமுத்திரம் திலகர்புரம் மெயின்ரோடு ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்திலும், கோபாலசமுத்திரம் வார்டு எண்.1-8 கோபாலசமுத்திரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் கூனியூர், தெற்கு அரியநாயகிபுரம் பகுதிக்கு கூனியூர் மகாலெட்சுமி திருமணமண்டபத்திலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முன்னீர்பள்ளம் பகுதிகளுக்கு முன்னீர்பள்ளம் சமுதாய நலக்கூடத்திலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பகுதிகளுக்கு திருமுருகன் கல்யாண மஹாலிலும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் லெவிஞ்சிபுரம் பகுதிகளுக்கு கண்ணன்குளம் அன்னை திருமண மண்டபத்திலும் நடைபெற்று வருகிறது.
இம்முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும், முகாமில் தீர்வு கிடைக்காத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தங்களது கோரிக்கைளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, சேவைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
ஆட்சியர், எம்பி ஆய்வு
முன்னதாக, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முன்னீர்பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் இன்றையதினம் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபரட் புரூஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நாளை (18.07.2025) தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண்.1, 2 பகுதிகளுக்கு தச்சநல்லூர் வெல்கம் மஹாலிலும், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு 3, 4 மற்றும் 5 பகுதிகளுக்கு அம்பாசமுத்திரம் மணிகண்ட மஹாலிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிபுதூர், செங்காளாக்குறிச்சி, புலியூர்குறிச்சி பகுதிகளுக்கு மலையடிபுதூர் விஜய் மஹாலிலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் அலங்காரப்பேரி, குப்பக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு பாப்பையாபுரம் ஆதிதிராவிடர் நலதொடக்கப் பள்ளியிலும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் பகுதிகளுக்கு வல்லத்தூர் சமுதாய நலக்கூடத்திலும், பள்ளக்கால் பகுதிகளுக்கு பள்ளக்கால் சமுதாய நலக்கூடத்திலும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கும்பிகுளம் பகுதிகளுக்கு கும்பிகுளம் விபிஆர்சி மையத்திலும் நடைபெறவுள்ளது.
22.07.2025 அன்று திருநெல்வேலி மண்டலம் வார்டு எண்.17 பகுதிகளுக்கு திருநெல்வேலி சோனா மஹாலிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வார்டு எண்.15, 18 பகுதிகளுக்கு கொட்டாரம் சி.எஸ்.ஐ சர்ச்சிலும், மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு எண்.9-15 மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் பிராஞ்சேரி, சித்தர்சத்திரம் பகுதிகளுக்கு பிராஞ்சேரி சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், தளபதிசமுத்திரம் பகுதிகளுக்கு தளபதிசமுத்திரம் ராஜேந்திரன் மஹாலிலும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் பகுதிகளுக்கு செட்டிகுளம் ரத்தினம் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்த டிஎஸ்பியின் கார் பறிப்பு? நடந்தே சென்றதால் சர்ச்சை!!
வியாழன் 17, ஜூலை 2025 5:31:16 PM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையை ஆரம்பித்தது யார்? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!
வியாழன் 17, ஜூலை 2025 3:57:09 PM (IST)

ரூ.5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
வியாழன் 17, ஜூலை 2025 3:19:42 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)

ம.தி.மு.க.வுக்கும், வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார் : மல்லை சத்யா
வியாழன் 17, ஜூலை 2025 12:50:38 PM (IST)
