» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!

வியாழன் 17, ஜூலை 2025 3:19:42 PM (IST)

மும்பையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஆன்லைன் வர்க்கத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறி ரோகன் மேனன் என்பவர் மோசடி செய்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மோசடி செய்யப்பட்டது உறுதியாகிய நிலையில், ரோகன் மேனன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ரோகன் மேனனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆன்லைன் வர்க்க மோசடி விவகாரத்தில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இது தொடர்பாக, படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

தற்போது, ரவீந்திர சந்திரசேகரனை கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்தபோது, அவரது உடல்நிலை காரணமாக கைது செய்யாமல், சம்மன் வழங்கி விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதே வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory