» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி!
புதன் 16, ஜூலை 2025 4:38:32 PM (IST)
குற்றாலத்தில் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 53 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் வழக்கம் போல இன்று காலை மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் என 9 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விடுதியில் சாப்பிட்ட பிற மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூ.5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
வியாழன் 17, ஜூலை 2025 3:19:42 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)

ம.தி.மு.க.வுக்கும், வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார் : மல்லை சத்யா
வியாழன் 17, ஜூலை 2025 12:50:38 PM (IST)

கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதி : அமர்நாத் ராமகிருஷ்ணன்
வியாழன் 17, ஜூலை 2025 12:23:28 PM (IST)

காமராஜர் குறித்து இழிவாக பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:03:48 PM (IST)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:27:01 AM (IST)
