» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா : எம்பி, அமைச்சர், மேயர், அரசியல் கட்சியினர் மரியாதை

செவ்வாய் 15, ஜூலை 2025 10:37:35 AM (IST)



தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் மாவட்ட  இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, நிர்மல் ராஜ், பாலகுருசாமி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, கவுன்சிலர்கள் கீதா, முருகேசன், சுரேஷ்குமார், வைதேகி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மதச்சார்பற்ற ஜனதாதளம் 



மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த தின விழா மாநில துணைத்தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமையில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், அதனை தொடர்ந்து வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. 

முன்னதாக, பக்கிள்புரத்தில் உள்ள காமராஜ் நினைவு நர்சரி பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்ட தலைவர் என்.வி.ராஜேந்திரபூபதி, செயலாளர் ஏ.கே.பாபு, துணை தலைவர் ஆர்.செல்வராஜ், மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், சாத்தாவு, வட்ட நிர்வாகிகள் கணபதி, ராமன், ராமசாமி, இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டு கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில்



தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிஎஸ் முரளிதரன், தெற்கு மாவட்ட தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திர போஸ் ,மாநகர் ஊடகப்பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory