» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!

செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது: 20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில் 2025-26ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்றுடன் (15.07.2025) அதன் கால அவகாசம் முடிவடைவதால், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாணாக்கர்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், 04.08.2025 அன்று மாணாக்கர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 20.08.2025 அன்று தொடங்கும்.

மாணாக்கர்கள் இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்று பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory