» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)
தமிழகத்தில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இயற்பியலில் 233, கணிதத்தில் 232, தமிழில் 216, ஆங்கிலம் 197, வணிகவியல் 198, வேதியியலில் 217 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)
