» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு: நீங்கள் யார் என்று கேட்ட டிரைவர், கண்டக்டர்!

திங்கள் 7, ஜூலை 2025 10:43:38 AM (IST)



அரியலூரில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை அரசு பஸ் டிரைவர் யார்? என்று கேட்டு பின்னர் அமைச்சர் என்று தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். 

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தர். அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்- மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டு இருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.

இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம், ''உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்? உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு சென்றால் யார் பதில் சொல்வது?'' என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவர்களால் அமைச்சர் சிவசங்கரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அப்போது அவர்கள் ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? என்று அலட்சியமாக பதிலளித்தனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, ''நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?'' என கேட்டார். 

''நீங்க யாருன்னு தெரியலையே'' என டிரைவர் கூறினார்.அதற்கு அமைச்சர் சிவசங்கர், '' நான் போக்கு வரத்து துறை அமைச்சர்'' என கூறியதும் டிரைவர், கண்டக்டர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ''இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள்'' என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory