» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)
நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் நாளை ஜூலை 9-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:50:54 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)
