» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)



புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம் இன்று பதவியேற்றார்.

அகில இந்திய பாஜக தலைவர் அடுத்த மாதம் (ஜூலை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலையொட்டி நேற்று வி.பி.ராமலிங்கம் மட்டுமே மாநில தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தற்போதைய தலைவர் செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.

மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி வி.பி.ராமலிங்கம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதிய மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. 

விழாவில், புதிய தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி அகிலன் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அகில இந்திய பொதுச்செயலாளர் தருண்சுக் முன்னிலையில் வி.பி.ராமலிங்கம் பதவியேற்றார். அவரிடம் முன்னாள் தலைவர் செல்வகணபதி எம்.பி கட்சியின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்தார். விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory