» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)
ஏர்வாடி அருகே விஷ வண்டு கடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளியான இவரது மகன் ஜீவானந்தம் (7), அங்குள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை மகன் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்தின்ராஜ்(6). இந்த 2 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு கிடந்த தேங்காயில் இருந்த கடந்தை விஷவண்டு 2 சிறுவர்களையும் கடித்தது. இதனால் 2 பேரும் அலறினார்கள். அவர்களை மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் ஜீவானந்தம் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)
