» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!

திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)



பாளையங்கோட்டையில் காலமான ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் உடலுக்கு சபாநாயகர் மு.அப்பாவு,  அமைச்சர் கே.என்.நேரு  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன்  உடல் நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory