» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உட்பட 3பேர் கைது
வியாழன் 1, மே 2025 8:32:04 AM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மீகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் நடுத் தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)
