» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு

செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)



திருநெல்வேலி மாநகர சுற்று பகுதிகளிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது தொடர்பாக மாவட்டஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், இன்று (06.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி மூளிக்குளம், உடையார்பட்டிகுளம், வழுக்கொடை, கண்டியப்பேரி, கிருஷ்ணபேரி, இலந்தைகுளம், தேனீர்குளம், சத்திரம்புதுக்குளம், செட்டிகுளம், அழகனேரி, பிராயன்குளம் போன்ற குளங்களில் அமலைச் செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் செல்லும் இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளையும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் தடையின்றி செல்வதற்கும், நீரைத் தேக்கி வைப்பதற்கும், தேவையான இடங்களில் கரைகளை பலப்படுத்துவதற்கான பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

ஆய்வில், திருநெல்வேலி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நகர்நல அலுவலர் ராணி , நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் ரமேஷ் , செண்பகநந்தினி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory