» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு!
புதன் 30, ஏப்ரல் 2025 9:09:31 PM (IST)

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்நியாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார். ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் வைபவம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் இன்று காலை நடைபெற்றது.
சந்நியாஸ்ரம தீட்சை பெருவதற்கு முன்பாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட், திருக்குளத்தில் இறங்கி தான் அணிந்திருந்த கடுக்கண், மோதிரம், பூணூல், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, சந்நியாசத்தை ஏற்றார். அதன்பின், வேத மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அவருக்கு தீட்சை வழங்கி பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை வழங்கினார்.
தொடர்ந்து இளைய மடாதிபதியின் தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்களைச் செய்தார். தொடர்ந்து, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அவருக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தை சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)
