» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் பலி; முதல்வர் இரங்கல்: நிவாரண நிதியுதவி அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 10:54:25 AM (IST)
சேலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.
அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.
பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.
இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)
