» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பலூன் பறக்க விட்ட ஆட்சியர்

சனி 23, மார்ச் 2024 9:47:25 PM (IST)



தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தென்காசியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் நாள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்விற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஏ.ஆ.சிவக்குமார், இ.சாமத்துரை, ஆ.கலைச்செல்வி, டேவிட் ஜெயசிங், தென்காசி கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory