» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாய் -தத்தெடுப்பு நெறிமுறைகள் அறிவிப்பு

சனி 23, மார்ச் 2024 4:01:40 PM (IST)



நெல்லையில் பெற்ற தாயால் மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை ரூபி தற்போது தத்து மையத்தின் பராமரிப்பில் உள்ளது. 
              
மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் என்பவருக்கு 22.11.2023 அன்று திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்தில் வைத்து பிறந்த பெண் குழந்தை ரூபி (பிறந்த தேதி 22.11.2023)-யை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 23.11.2023 அன்று அனுமதிக்கப்பட்டு பின் 27.11.2023 அன்று குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்றதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை ரூபி திருநெல்வேலி சைல்டு ஹெல்ப்லைன் மூலமாக 08.03.2024 அன்று குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது குழந்தை ரூபி தத்து மையத்தின் பராமரிப்பில் உள்ளார்

மேற்கண்ட குழந்தை தொடர்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் "மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி தொலைபேசி எண் : 0462-2901953, மின்னஞ்சல் முகவரி : [email protected] என்ற முகவரியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் அணுகுமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக எவரும் உரிமை கோராத நிலையில் தத்தெடுப்பு நெறிமுறைகள் 2022 கீழ் குழந்தை தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


மற்றொரு குழந்தை

திருநெல்வேலி மாவட்டம், பிறந்த குழந்தை வசந்தி (பிறந்த தேதி 05.04.2023, 10 மாதங்கள்) பெற்றோர் வளர்க்க விருப்பம் இல்லாமல் 20.04.2023 அன்று குழந்தை நலக்குழுவில் ஒப்படைத்தனர். 

மேற்கண்ட குழந்தை தொடர்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் "மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி தொலைபேசி                                எண் : 0462-2901953, மின்னஞ்சல் முகவரி : [email protected] என்ற முகவரியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் அணுகுமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக எவரும் உரிமை கோராத நிலையில் தத்தெடுப்பு நெறிமுறைகள் 2022 கீழ் குழந்தை தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory