» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளி 22, மார்ச் 2024 5:48:02 PM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021-ல் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

இதையடுத்து சீமான் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory