» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

வெள்ளி 15, மார்ச் 2024 10:05:16 AM (IST)



தமிழகத்தின் "தென்பழனி" கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. 

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இதனை தொடர்ந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனையும் நடந்தது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகரமான தேரோட்டம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.  25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory